ரஷ்யாவில் சில நாட்கள் இடைவெளியில் அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குரில் தீவுகளில் (Kuril Islands) சுமார் 6.8 மெக்னிடியூட் அளவில் வலிமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பின்பு இந்த நில அதிர்வு 7 மெக்னிடியூட் அளவிலிருந்ததாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வலிமையான நில அதிர்வைத் தொடர்ந்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், கம்சட்காவின் (Kamchatka) பல கடலோரப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை அலைகள் வரக்கூடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
மேலும், கம்சட்காவின் அருகே உள்ள அதிக ஆபத்துள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.