பழனி, குபேர பட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (28) என்ற வாலிபர், நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை தொடங்கினர். விசாரணையில், நவநீதனுக்கும், ஜவஹர் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து, மது அருந்துதல், உணவகம், சினிமா செல்வது என செலவுகளைப் பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் திருமணமான அஜித்குமார், நண்பனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
நண்பனின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத நவநீதன், அஜித்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இப்படியாக, அஜித்குமாரின் மனைவியுடனும் நட்பாக பழக தொடங்கியுள்ளார் நவநீதன்.
ஒரு கட்டத்தில், இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களுக்கு கள்ளக்காதலை கொண்டாடி வந்துள்ளார்.
இருவரும் தனிமையில் சந்தித்து, மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாடியது மற்றும் உல்லாசமாக இருந்தது என அனைத்து லீலைகளும் அஜித்குமாரின் செல்போன் சோதனையில் தெரியவந்தது.
மனைவியையும், நண்பனையும் கண்டித்த அஜித்குமார், நவநீதனின் தொடர்ந்த துரோகத்தால் ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று, நவநீதனை வழக்கமாக மது குடிக்கும் பகுதிக்கு வர சொன்ன அஜித்குமார்.
நவநீதனுக்கு அதிகப்படியான மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளார். அதன் பிறகு, தன்னுடைய ஆத்திரத்திற்கு தீனி போட முடிவு செய்தார்.
போதையில் தள்ளாடிய நவநீதனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி.. கத்தி உடையும் அளவுக்கு சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இந்த வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர், அஜித்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம்,பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் நட்பையும்.. உறவான குடும்பத்தையும் உடைத்து சிதைத்துள்ளது ஒரே ஒரு திருமணம் தாண்டிய உறவு. இந்த கொள்கையை பரப்பி வரும் பகுத்தறிவு வாதிகள் இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.