முன்னெடுக்கப்படும்பட்சத்தில் கடந்த 1996காலப்பகுதயில் செம்மணிதொடக்கம் துண்டி இராணுவமுகாம்வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம்முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம்பற்றிய விபரங்கள், மணியம்தோட்டம்பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச்செயலர் உள்ளிட்டதரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள்தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 07ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதிவிசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரியசபையைக்கோருகின்றேன்.
அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதிவிசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதிவிசாரணைமாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஓரே மார்க்கமாகஅமையும்.
அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழியில் தொடர்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக்கேட்டுக்கொள்வது டன், பன்னாட்டு நிபுணத்துவங்கள்பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிவிவகாரத்திற்கும் பன்னாட்டு நீதிவிசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.