கடந்த சில தினங்களாக உலகை உலுக்கிய வைரல் வீடியோ ஒன்று, செவ்வாய் கிரகத்தில் பாம்பு போன்ற உயிரினம் நெளிவதாகக் கூறி இணையத்தில் பரவியது. அதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
நாசாவின் ரோவர் எடுத்ததாகக் கருதப்பட்ட இந்தக் காணொளி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இதனை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோவெனவும், மற்றவர்கள் உண்மையான காணொளியாக இருக்கலாம் எனவும் வாதிட்டனர்.
இந்த வீடியோ செவ்வாயில் உயிரினங்கள், குறிப்பாக பிரமாண்டமான பாம்பு போன்ற உயிரினம் இருக்கலாம் என்ற அச்சத்தை மக்களிடையே தூண்டியது.
ஆனால், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதனை ஆராய்ந்து, இது A.I வீடியோ அல்ல. உண்மையான வீடியோ தான் என்றும் வீடியோவில் தோன்றும் பாம்பு போன்ற உருவம் உண்மையானது என்றாலும், அது செவ்வாய் கிரகத்தில் பதிவாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தக் காணொளி பூமியின் பாலைவனப் பகுதியில் எடுக்கப்பட்டது, செவ்வாயில் பதிவானதாக தவறாகப் பரப்பப்பட்டதாக அவர்கள் விளக்கினர்.இந்த விளக்கம், இரண்டு நாட்களாக உலகை உலுக்கிய வீடியோவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், மக்களை தவறான தகவல்களை நம்ப வேண்டாமென எச்சரித்துள்ளனர்.