மதுரையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமதுவின் வாழ்க்கை, ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் லைலா கதாபாத்திரத்தைப் போல ஒரு இளம்பெண்ணால் தலைகீழாக மாறிய கதை, இப்போது சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற பெண்ணின் திருமண ஆசைக் கனவு, ஹாரிஸுக்கு 19 லட்சம் ரூபாய் இழப்பையும், மன உளைச்சலையும் தந்து நிற்கிறது.ஹாரிஸ் முகமது, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, துபாயில் வேலை பார்த்து வந்தவர்.
வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை எதிர்பார்த்திருந்த அவருக்கு, ஒரு நண்பர் மூலம் ஜெனிஃபர் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. முதலில் நட்பாகத் தொடங்கிய உறவு, விரைவில் காதலாக பரிணமித்தது.
ஜெனிஃபர், தனது கணவர் மதுப்பழக்கத்தால் தன்னை துன்புறுத்துவதாகவும், அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தன்னை கவனிக்கவே இல்லை என்றும் ஹாரிஸிடம் உருக்கமாகப் பேசினார். இந்த புலம்பல்கள், ஹாரிஸின் மனதில் அனுதாபத்தையும், அவர் மீது நம்பிக்கையையும் வளர்த்தன.
அவருக்கு 1.5 லட்சம் ரூபாய், தங்கச் சங்கிலி, பிராண்ட் வாட்ச், மோதிரம் என பல பொருட்களை ஹாரிஸ் கொடுத்தார். மதுரைக்கு வந்தபோது, வீட்டுக்குத் தேவையான கட்டில், மெத்தை, பீரோ போன்றவற்றையும் வாங்கி அமைத்தார். மேலும், ஜெனிஃபருக்கு செலவுக்கு என்று தனது ஏடிஎம் கார்டை கொடுத்து, 7 லட்சம் ரூபாய் எடுத்து செலவழிக்கப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்விவாகரத்து வாங்கிடுறேன், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்,” என்று ஜெனிஃபர் உறுதியளித்து, ஹாரிஸை தொடர்ந்து நம்ப வைத்தார். ஆனால், திடீரென ஒரு நாள், ஜெனிஃபர் தொடர்பை முற்றிலும் துண்டித்தார். அவரது தாயிடம் விசாரித்தபோது, “ஜெனிஃபர் இறந்துவிட்டார்,” என்று கூறப்பட்டது. இது, ஹாரிஸுக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது.ஆனால், உண்மை வெளிவந்தபோது, ஜெனிஃபர் சிவகங்கையில் உயிருடன் இருப்பது தெரியவந்தது.ஒட்டுமொத்தமாக, ஜெனிஃபர் மற்றும் அவரது குடும்பத்தினர், 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள், பொருட்களை மோசடி செய்ததாக ஹாரிஸ் புகார் அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.புரம் மற்றும் திருப்பாலை காவல் நிலையங்களில் ஜெனிஃபர், அவரது பெற்றோர் மற்றும் பூசாரி கணேசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘உன்னை நினைத்து’ படத்தில் லைலாவின் கதாபாத்திரம் மாதிரி, திருமண ஆசையைக் காட்டி ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை ஏமாற்றிய இந்தச் சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த மோசடியின் உண்மை நிலவரம், காவல்துறையின் விசாரணையில் தெரியவரும்.