பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.