உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் கசகஞ்ச் கச்னவ் கிராமத்தை சேர்ந்தவர் அன்சர் அகமது (வயது 38). இவருக்கு சபிஜோல், நஸ்னீன் பானு என 2 மனைவிகள் உள்ளனர்.
குழந்தைகள் இல்லை. அன்சர் அகமதும் அவரது 2 மனைவிகளும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதில், 3 பேருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அகமதுவுக்கும் அவரது 2வது மனைவி நஸ்னீன் பானுவுக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கத்தியால் அகமதுவின் பிறப்புறுப்பை நஸ்னீன் பானு அறுத்தார். இதில் படுகாயமடைந்த அகமது அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு முதல் மனைவியும்
கிராமத்தினரும் அகமதுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நஸ்னீன் பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்