விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த வனராஜ் (50) என்பவர், தனது மூன்றாவது மனைவியான உமாவை (28) கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனராஜ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்தவர். கணவரைப் பிரிந்து, இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த உமாவை மூன்றாவதாக திருமணம் செய்து, தோட்டத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.
அந்த இரவு, மகள்கள் தூங்கிய பிறகு, வனராஜும் உமாவும் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் தங்கியிருந்தனர். காவல் பணிக்கு சென்றிருந்த வனராஜ், உமாவுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார்.
மது போதையில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். அப்போது, வனராஜ், "என்னால் நீண்ட நேரம் இயங்க முடியவில்லை" என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், உமா அதை ஏற்க மறுத்து, "அதெல்லாம் முடியாது, என்னை திருப்தி படுத்து" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த வனராஜ், அங்கிருந்த டார்ச் லைட்டை எடுத்து செய்யக்கூடாத வேலையை செய்துள்ளார். இதனால், உமாவுக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டு, அலறி துடித்து மயங்கினார். ஆனால், உமா மதுப்போதையில் மயங்கியதாக நினைத்த வனராஜ், அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
மறுநாள் காலையில், உமாவின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வெகுநேரம் கழித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்ராயிருப்பு காவல் துறையினர், உமாவின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், வனராஜின் கொடூரச் செயல் அம்பலமானது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மிரட்டலான சம்பவம், அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் பெரும் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உறவுகளில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.