கொழும்பு - இராஜகிரிய பிரதேசத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் பத்தரமுல்லை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பன்னிபிட்டிய வீதி, தலவத்துகொட பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தரமுல்லை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.