செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூரில் 2017-18ல் நடந்த குழந்தைகள் கொலை வழக்கு, தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர சம்பவமாகும்.
இந்த வழக்கில், பிரபல வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன், Citi Fox Media யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தீர்ப்பு மற்றும் வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரம் (எ) மீனாட்சி ஆகியோர், அபிராமியின் இரு குழந்தைகளை (வயது 3 மற்றும் 5) கொலை செய்த குற்றத்திற்காக, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் 2025 ஜூலை 24 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பை மாண்புமிகு நீதிபதி செம்மல் அவர்கள் வழங்கினார்.
வழக்கின் பின்னணி:
அபிராமி, குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர். விஜய், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேலையில் பணிபுரிந்து, கௌரவமான வாழ்க்கையை வழங்கினார்.
இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அபிராமி, சமூக வலைதளங்களில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டினார். இதனிடையே, சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டது.
2017-18ல், அபிராமி, சுந்தரத்துடன் தனது குழந்தைகளை விட்டுவிட்டு ஓட முயன்றார். ஆனால், கணவர் விஜய், குடும்பத்தை ஒன்றிணைக்க முயன்று, சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
இருப்பினும், அபிராமி, சுந்தரத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.2018ல், அபிராமி, சுந்தரத்தின் தூண்டுதலுடன், தனது இரு குழந்தைகளுக்கு ஐந்து மாத்திரைகள் (தூக்க மாத்திரைகள்) கொடுத்து, ஒரு குழந்தையை கொலை செய்து, மற்றொரு குழந்தையை உயிருடன் வைத்திருந்தார்.
ஆனால், இரண்டாவது குழந்தையும் பின்னர் உயிரிழந்தது. இதை மறைக்க, சுந்தரத்துடன் ஓட முயன்ற அபிராமி, கோயம்பேடு பகுதியில் சுந்தரத்தால் விடப்பட்டார். விஜய், வீடு பூட்டியிருப்பதைக் கண்டு, உள்ளே சென்று குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு, காவல்துறையில் புகார் அளித்தார்.
சுந்தரம் மற்றும் அபிராமி, நாகர்கோவில் பகுதியில் கைது செய்யப்பட்டனர். ஆடியோ உரையாடல்கள், 25 சாட்சிகள், மற்றும் தொலைபேசி பதிவுகள் ஆதாரமாக அளிக்கப்பட்டன.
வழக்கறிஞர் தமிழ்வேந்தனின் பேட்டி:
வழக்கறிஞர் தமிழ்வேந்தன், இந்த வழக்கை 8 ஆண்டுகளாக கவனமாக பின்தொடர்ந்ததாகவும், ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் கூறினார்.
அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை, “நீதி வென்றது” என வரவேற்றார். ஆனால், “காந்தி பிறந்த மண்ணில் மரண தண்டனை கொடுக்கப்படவில்லை” என வருத்தம் தெரிவித்தார்.
அபிராமி, நீதிமன்றத்திற்கு நெயில் பாலிஷ், மேக்கப், தலையில் அழகான கிளிப்புகள், லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு எதோ பேஷன் ஷோவிற்கு போவது போல வந்திருந்தார்.
பொதுவாக தீர்ப்பு வரும் போது, குற்றவாளிகள் பாவப்பட்ட கோலத்தில் வருவார்கள். அப்போதாவது, நம் மீது கருணை அடிப்படையில் தண்டனையை குறைக்க கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
ஆனால், இந்த ஜென்மத்துக்கு விடுதலை ஆக வேண்டும் என்றோ.. தண்டனையை குறைத்து பெற வேண்டும் என்றோ எந்த எண்ணமும் கிடையாது.. இவளுக்கு அடங்காத உடலுறவு பசி... காமவெறி.. எந்நேரமும் அதே எண்ணத்தில் இருக்க கூடிய ஜென்மம் இது.
யோசித்து பாருங்க.. தன்னுடைய இரண்டு குழந்தைகளை கொலை செய்து.. ஜெயிலில் இருந்து கொண்டு.. தன்னோட முகத்தை கண்ணாடியில் பாத்து தலை சீவி.. லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு.. கண் மை வச்சிக்கிட்டு.. தன்னுடை அழகை அவளால் ரசிக்க முடிகிறது என்றால் நீங்க புரிஞ்சுக்கோங்க இவ எவ்ளோ பெரிய கேவலமான ஜென்மம்ன்னு.. என கடுமையாக விமர்சித்த அவர், “அவர் குழந்தைகளுக்காகவோ, கணவருக்காகவோ அழவில்லை; ஜெயிலில் இருந்து விடுதலை ஆகலாம் என்ற நம்பிக்கையில் அழுதார்” என்றார்.
மேலும், புழல் சிறையில் அபிராமி அதிகாரிகளின் ஆதரவுடன் “சுதந்திரமாக” இருப்பதாக பரவும் வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, “ஜெயிலில் நல்ல உணவு, வசதிகளுடன் இருக்கிறார்.. முக்கிய அதிகாரிகளின் உதவி இல்லாமல் இதெல்லாம் வாய்ப்பே இல்லை.. ஜெயிலில் அபிராமி ஜகஜோதியாக இருக்கிறார்.. விட்ருங்க.. இதை பத்தி பேசுனா எனக்கு கோவம் வருது” என கூறினார்.
அபிராமியின் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும், கணவர் விஜய், தனது உயிர் தப்பியதற்கு நிம்மதி அடைந்திருப்பார் என்றும் தமிழ்வேந்தன் கூறினார். “விஜய் அன்று இரவு அலுவலகத்தில் தங்கியதால் உயிர் பிழைத்தார்; இல்லையெனில், அவரும் கொல்லப்பட்டிருக்கலாம்” என்றார்.
இந்த தீர்ப்பு, மேல்முறையீட்டில் மாற வாய்ப்பில்லை எனவும், குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றம் சென்றாலும் தண்டனை உறுதியாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்