தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் இது தான் அவருக்கு முதல் படம்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படமான ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் இது தான் அவருக்கு முதல் படம்.
தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ். 1999 - 2004 ம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்ற மூத்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், சிறிது காலமாக படங்களில் இருந்து விலகி இருக்கிறார். வயது மற்றும் உடல்நலக் காரணங்களால் தற்போது அவர் நடக்க முடியாமல் தவிப்பதைக் கண்டு டோலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடைசியாக 2023-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சுவர்ண சுந்தரி' படத்தில் நடித்தார். அதன் பிறகு, அவர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அவரைச் சந்தித்தார். கோட்டா ஸ்ரீனிவாச ராவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் காணப்படும் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் நிலையைப் பார்த்து நெட்டிசன்களும் ரசிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் அவர் மிகவும் பலவீனமடைந்து காலில் கட்டு கட்டுடன் காணப்பட்டதால், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஐதராபாத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இன்று காலை காலமானார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

பத்மஸ்ரீ மற்றும் பல நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் வென்றுள்ள கோட்டா சீனிவாச ராவ் ஒரு முறை ஆந்திராவின் எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சினிமாவை தாண்டி, தனது ஒழுக்கம், நேர்மை மற்றும் கலை மீதான அன்பு ஆகியவை காரணமாக கோட்டா சீனிவாச ராவ் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.