புளியம்குளம் பகுதியில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 24 வயதுடைய ஜெயசீலன். துவாகரன் என்ற கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 12.15 மணியளவில் புளியம்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞன் தொடர்பில் தெரியவருகையில்,
kt tec கல்வி நிலையத்தில் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி பல மாணவர்களை சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள வழிவகுத்ததுடன் மாணவர் மற்றும் ஆசிரியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
குறித்த இளைஞனின் மறைவானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.