2026 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களை அரசாங்க பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான சேர்க்கை செயல்முறை வழிமுறைகளை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk இல் அது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மாதிரியில் இருக்கும் அறிவுறுத்தல்களின்படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காலம்.
சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 04 ஆம் திகதிக்கு முன் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.