ரஸ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30/07/2025) 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரஸ்யா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 19 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுனாமி எச்சரிக்கையை அடுத்து,குடியிருப்பாளர்கள் கடற்கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ரஸ்யாவின்யெலிசோவோ மாவட்டத்தில் 3-4 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை குறைந்தபட்ச சேதம் பதிவாகியுள்ளதாகவும் ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் பசிபிக் கடற்கரைக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஜப்பானிய நேரப்படி முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை 1 மீட்டர் உயர அலைகள் நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே கடற்கரையிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
