மசாஜ் நிலையம் என்ற போர்வைியல் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதன்போது, குறித்த விடுதியின் மேலாளரும், ஒன்பது தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் பிடியாணை வைத்து இந்த சுற்றிவளைப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பண்டாரவளை பகுதியில் வசிக்கும் விபச்சார விடுதியின் மேலாளராக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.