அரச பாடசாலைகளில் ஒரு மாணவனுக்கு மாதம் ஒன்றுக்கு 400 லீட்டர் நீர் பாவனைக்கு கட்டணம் செலுத்த நடவடிக்கை....!! அரச பாடசாலைகளில் நீர் பயன்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்று நிரூபத்தின் பிரகாரம் ஒரு மாணவன் அல்லது கல்விசாரா உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 20 லீட்டர் விகிதம் ஒரு மாதத்திற்கு 400 லீட்டர் நீர் பாவனைக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது இதற்கு அமைய பாடசாலையில் உள்ள கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் தொகைக்கு ஏற்ப இந்த மொத்தமாக பயன்படுத்தப்படும் நீர் கொள்வனவு கணக்கிடப்பட்டு அதற்கான கொடுப்பனவுகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட உள்ளன.