நாட்டில் வருடம் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் வைத்தியர் சமித சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களை குறைக்கும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு வாரம் கடந்த 7 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.