அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு செல்லவிருந்த விமானத்தில் திடீரென தீப்பரவியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 விமானமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
தரையிறங்கும் சக்கரங்கள் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விமானத்தின் சக்கரத்தில் தீ மற்றும் புகை பரவியதை அவதானித்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அதில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 6 பயணிகள் காயமடைந்ததுடன், ஒரு பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.