முப்பது ஆண்டுகளாக சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை மீட்பதற்காக 24 மற்றும் 25 ம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.