குடும்பத்துடன் மோட்டார்சைக்கிளில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியை இன்று மன்னாரில் இடம்பெறவுள்ளது
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி வழியே தனது தாய் தந்தை மற்றும் அக்காவுடன் மோட்டார்சைக்கிளில் ஒன்றாக பயணிக்கும் போது பின்னால் வந்த பிக்கப் ரக வாகனம் மோதியதில் மோட்டார்சைக்கிள் பயணித்த நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த நால்வரும் காயமடைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தன் மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாது இரண்டு கால்களும் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து பெருந் துயருடன் வழி அனுப்பி வைக்கும் தந்தையின் மன வேதனையை வார்த்தையில் சொல்லி விடமுடியாது. தம்பி இறந்தது தெரியாமல் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அக்கா ஒரு குடும்பத்தையே சிதைத்த அந்த ஒரு நிமிடம். வேதனையானதுதான்.
20 வயது கப் ரக வாகனத்தை செலுத்திய சாரதியின் பாதுகாப்பற்ற வாகனம் செலுத்துகையால் உயிரிழந்த இச் சிறுவனை யார் அவர்களது குடும்பத்திற்கு மீட்டுக்கொடுப்பது. இறுதியாக அப்பா என்று அழைத்து விட்டு மடியில் சாய்ந்ததாக அவரது உறவுக் காரர் ஒருவர் பதிவிட்டிருந்ததை அவதானித்தேன் இது போன்ற கொடூரங்கள் இனியும் நிகழாது இறைவன் துணை நிக்கட்டும்
உயிரிழந்த சிறுவனின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதுன் அவர்களது குடும்பத்தினரும்சுகமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்
இந்த நிலை எதிரிக்கும் வர கூடாது நேற்று நடந்த விபத்தில் அப்பாவிடம் மகன் இறந்ததை உடனே சொல்ல முடியாத சூழல் மனைவி காயத்துடன் கால்கள் முறிந்த நிலையில் இருந்த கணவனை பார்க்க போகும் போது 4 வயது மகன் பச்ச குழந்தை இறந்ததை தெரிந்தும் கணவனிடம் சொல்ல முடியாத சூழல் தம்பிக்கு என்ன நடந்த அப்பா எப்படி இருக்கார் அம்மா நல்லமா இருக்காங்களா என்றே தெரியாமல் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மகள், மனைவியிடம் தம்பி தங்கை எங்க அவங்க நல்லா இருக்காங்களா அவங்கள நல்லா பாத்துக்க என்று மகன் இறந்ததுகூட தெரியாமல் மகன் பிழைத்திருக்கும் என்னும் ஏதோ ஒரு நம்பிக்கைஅழுகையை அடக்கி மனதை திடப்படுத்திய மனைவியின் நிமிடங்கள் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்த உறவினர்கள் குழந்தை அடிபட்ட இடத்திலே இறந்துவிட்டான் பிண அறையில் மூடியபடி உடலை பார்த்த போது ஏற்பட்ட உச்ச கட்ட துக்க நிலை இறுதியில் எப்படியும் பிள்ளை இறந்ததை அப்பாவிற்கு தெரியப்படுத்த முயன்று மகன் அதிதீவிர சிகிச்சையில் என்று சொல்லி இறுதியில் இறந்த செய்தியுடன் நடக்க முடியா நிலையில் இறந்த பிள்ளையை பார்த்த அப்பாவின் நிமிடங்கள் எல்லாமே ஏற்க முடியாத இழப்பு ஊரே இழந்து நிற்கிறது.20 வயது வாகன ஓட்டுனர் ஏன்டா இப்படி வேகமா போய் ஒவ்வொரு மனித உயிர்களையும் சா'வடிக்கிறீங்க
இந்த புகைப்படத்த பார்த்தாவது வாகன ஓட்டுனர்களே மெதுவா பயணம் செய்ங்க உங்களால அடுத்தவர்களும் பலதை இழக்கிறார்கள்..
எங்கள் ஊர் இழந்து மீளா துயரில் இருக்கிறது
செல்ல பாப்பா miss you papa 🥹💔