இடுகைகள்

மாத முதல் நாளே க்ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை


ஜூலை முதலாம் திகதியான இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் தங்கம் விலை வரலாறு காணாத விலையை எட்டியது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் மாதக் கடைசியில் கடந்த 8 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து வந்தது.

அந்தவகையில் ஜூன் மாத கடைசி நாளான நேற்று (30.06.2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை

இந்நிலையில் இன்று (ஜூலை 1) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று (01.07.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,020க்கும், சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7,440க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.59,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது

அதேவேளை வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. 

அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.