உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் தலா ரூ. 100,000 ஊக்குவிப்பு வழங்கப்பட்டது தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதுவரை இருந்த ஜனாதிபதியின் நிதியை தற்போதைய அரசாங்கம் மக்கள் நிதியாக மாற்ற முடிந்துள்ளதாகவும், மக்களின் நல்வாழ்வுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்ற முடிந்துள்ளதாகவும், அரசியல்
அடியாட்களின் சிகிச்சை மற்றும் பயணத்திற்காக ஜனாதிபதி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அது ஒரு பொது நல நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், உலகைக் காண்பதற்காக பறந்து செல்வதற்காக கல்வி எனும் சிறகுகளை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்றும், கல்வி அவர்களை மனிதாபிமான குடிமக்களாக மாற்ற உதவும் என்றும் கூறினார்.