சமூக ஊடக பதிவில் இஸ்ரேல் எதிர்ப்பு பதிவென்றை பதிவு செய்தமைக்காக 9 மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புவைக்கப்பட்டிருந்த மொஹமட் சுஹைல் என்ற 21 வயது இளைஞனை மவுண்ட்லவெனியா நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
நீதவான் நீதிமன்ற அமர்வின் போது பொலிஸார் முகமட் சுகைலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இன்றைய நீதவான் நீதிமன்ற அமர்வின் போது போலீசார் முகமட் சுகைலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இதன்போது இலங்கை போலீஸ் நினைப்புகளைத் பிரதிநிதித்துவம் செய்து ஆஜராகிய தெகிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மொஹமட் சுஹைலை பிணையில் விடுதலை செய்யலாம் என்ற சட்டமா அதிபரின் பரிந்துரையை நீதிமன்றத்தில் கையளித்தார்.
இதனை கருத்தில் எடுத்த நீதவான் சுகைலை பிணையில் விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இவர் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலிய தூதரகத்தின் அருகில் கைது செய்யப்பட்டார். முதலில் இவரை அடையாள அட்டை வைத்திருக்காததால் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இவர் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கரை ஒட்டினார் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும் நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.
எனினும் பின்னர் இவர் இன்ஸ்டாகிராமில் இஸ்ரேலிய கொடி காலால் மிதிக்கப்படும் படத்தை பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.