2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சையில் கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் 66 வருட வரலாற்றில் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய 89 மாணவர்களில் 60 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 5 மாணவர்கள் 9A சித்தியினையும் 6 மாணவர்கள் 8A சித்தியினையும் பெற்றுள்ளனர்.
மேலும், 5 மாணவர்கள் 7A சித்தியினையும் 3 மாணவர்கள் 6A சித்தியினையும் 3 மாணவர்கள் 5A சித்தியினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.