அஸ்வெசும நலத்திட்டத்தின் 2ஆம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் மற்றும் திணைக்கள அலுவலர்கள் அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதே பட்டியல் நலன்புரி சபையின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.wbb.gov.lk இலும் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்திற்கான தகவல் சேகரிப்பின் போது வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக உணரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதியான பயனாளிகளின் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால், அவர்கள் மேன்முறையீடு செய்யலாம்.