கிழக்கில் ஒரே நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்ட 26 பேர்! வெளியான திடுக்கிடும் தகவல்


பராட்டா, சுட்ட கோழி, மயோனைஸ் சாப்பிட்ட 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி மூதூர், குச்சவளியைச் சேர்ந்தவர்களும் பாதிப்பு கிண்ணியாவில் 02 ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு.!

இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 ஐந்து பேரும், மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆறு பேரும் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிண்ணியா வைத்தியசாலையில் 11 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் 6 ஆண்கள் என மொத்தமாக 20 பேரும், மூதூர் தள வைத்தியசாலையில் 3 பேரும், குச்சவெளி வைத்தியசாலையில் 3 பேரும் என மொத்தமாக 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள இரு ஹோட்டல்களில் பராட்டா, சுட்ட கோழி (BBQ), மயோனிஸ் ஆகிய உணவை சாப்பிட்டவர்கள் என தெரிய வருகிறது.

இவர்கள் நேற்று (22) காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம் மற்றும் வாந்தி காரணமாக, ஒரு மாணவன் பாடசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

இவர்களுக்கு கடுமையான வயிற்று வலியோடு, தொடர்ச்சியான வாந்தியும் வயிற்றோற்றட்டமும் ஏற்பட்டிருப்பதோடு, தலைசுற்றும் ஏற்பட்டிருக்கின்றது. சிறுவர்கள் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். அஜித் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இரு ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதோடு, மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

மூன்று ஹோட்டல்களில் உணவு மாதிரி பெறப்பட்டு, பாக்டீரியா பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.சகல ஹோட்டல்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 




கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.