இந்தியாவின் - ஜார்க்கண்டில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று , எரிவாயு கொண்டு சென்ற பாரவூர்தியுடன் மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் மோகன்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஜமுனியா வனப்பகுதிக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய இந்திய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.