திருப்பூர் ரிதன்யா வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'புதிய சிந்தனை' யூடியூப் சேனலில் நடைபெற்ற நேர்காணலில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் வெற்றிவேந்தர் இந்த வழக்கு குறித்து மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார்.
இந்த வழக்கு, வரதட்சணை கொடுமை மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை உள்ளடக்கிய ஒரு கொடூரமான சம்பவமாக பேசப்படுகிறது.
வழக்கறிஞர் சார்லஸ் கூறுகையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், அவரது மாமனார், மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் இணைந்து ரிதன்யாவுக்கு எதிராக மிகவும் அவமானகரமான மற்றும் அசிங்கமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"இந்த மூவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பெரும் துன்பத்தை விளைவித்துள்ளனர். சொல்ல முடியாத அளவுக்கு கொடூரமான ஒரு செயல் நடந்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
ரிதன்யாவின் குடும்பம் 100 சவரன் நகைகள், ஒரு வால்வோ கார், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஆகியவற்றை வரதட்சணையாக வழங்கிய போதிலும், இந்தக் கொடுமைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
கவின்குமார், அவரது தந்தை மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் ஒரு ஆடியோ பதிவு முக்கிய ஆதாரமாக விளங்குவதாகவும், அதில் பெண்ணுக்கு எதிராக நடந்த கொடுமைகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் சார்லஸ் குறிப்பிட்டார்.
அதிலும், அவர் அருந்திய விஷத்தை குடித்தால் உடனே உயிர் போகாது குறைந்த பட்சம் 2 மணி நேரம் நரக வேதனை அனுபவிக்க வேண்டும். காருக்குள் தனக்கு நடந்த கொடுமைகளை நினைத்து.. விஷத்தின் கொடுமை என சுமார் 2 மணி நேரம் சொல்ல முடியாத வேதனைகளை ரிதன்யா அனுபவித்துள்ளார்.
"இந்த வழக்கு ஒரு அரியவகை (rarest of the rare) வழக்கு. இதில் உடல் ரீதியான துன்புறுத்தல் மட்டுமல்ல, மிகவும் அவமானகரமான செயல்களும் நடந்துள்ளன. இதை எதிர்கொள்ளும் மனவலிமை ரிதன்யாவுக்கு இல்லாததால், அவர் இந்தக் கொடுமைகளை தனது பெற்றோரிடமோ உறவினர்களிடமோ பகிர்ந்து கொள்ள முடியவில்லை," என்று சார்லஸ் வேதனை தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் மாமனார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, புலனாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த வழக்கில் அரசியல் தலையீடு குறித்த பேச்சுகள் எழுந்த போதிலும், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் செல்வ பருந்தகை இதில் எந்தவித தலையீடும் இல்லை எனவும், தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரிதன்யாவின் தந்தை, தனது மகள் வீட்டிற்கு வரும்போது நடக்க முடியாத அளவுக்கு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அப்போதே ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருப்பதை உணர்ந்ததாகவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
"என் மகளை கிளி போல வளர்த்தோம், ஆனால் அவளை இப்படி ஒரு கொடூரமான சூழலில் விட்டுவிட்டோம்," என்று அவர் வேதனை தெரிவித்தார்.வழக்கறிஞர் சார்லஸ், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"இதுபோன்ற வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே இனி இதுபோன்ற குற்றங்கள் நடப்பதை தடுக்க முடியும். இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும்," என்று அவர் கூறினார்.தற்போது இந்த வழக்கு தீவிர விசாரணையில் உள்ளது.
மொபைல் போன்களின் புலனாய்வு முடிவுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிதன்யாவின் குடும்பம் சட்ட ரீதியாக போராடி நீதி பெறுவதற்கு உறுதியாக உள்ளது. இந்த வழக்கு, வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
ஒரு சில வழக்குகள்ல தண்டனை உச்சபட்சமா ஏன்னா உங்களுக்கு தெரியும் ஆணவப்படுகொலை வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் மிகப்பெரிய ஒரு உத்தரவு ஒன்னு கடந்த மாதம் ஒன்னு சொன்னாங்க.
ஃபர்ஸ்ட்ஃபர்ஸ்ட் ஒரு ஆணவ கொலை கடலூர் மாவட்டத்தில நடந்துச்சு. 15 பேர் சேர்ந்து காதில் விஷத்தை ஊற்றி அந்த ரெண்டு காதலர்களை தூக்கிட்டு போய் கொன்னுட்டாங்க.
அந்த வழக்கில் தொடர்புரடையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. உடனே, அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டு போறாங்க. ஆனா, உச்ச நீதிமன்றம் வந்து தண்டனை எல்லாம் குறைக்க முடியாது ஆயுள் முழுக்க சிறையிலேயே இருக்கட்டும் என தண்டனை உறுதி செய்றாங்க. அது போலரிதன்யா வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கணும் என பேசியுள்ளார் வழக்கறிஞர் சார்லஸ்.