சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
கடந்த சனிக்கிழமை, சாலையில் இயல்பாக நடந்து சென்ற பத்து வயது சிறுமி மீது ஒரு நபர் மேற்கொண்ட பாலியல் வன்கொடுமை சம்பவம், சிசிடிவி காட்சிகளில் பதிவானது. அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி, பலரது மனதையும் நெஞ்சையும் பதைபதைக்க வைத்துள்ளன.
இந்தக் கோர சம்பவம் நடந்தேறி ஐந்து நாட்கள் கடந்தும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. சிறுமி என்றும், குழந்தை என்றும் பார்க்காமல் இப்படிப்பட்ட வன்கொடுமைகளை மேற்கொள்ளும் நபர்கள், சமூகத்தில் சுதந்திரமாக உலாவுவது, பாதுகாப்பற்ற சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.