தனது தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் அநுராதபுரம் - கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, கல்னேவ - ஹெலபதுகமவில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், தடயவியல் மருத்துவ அறிக்கையில் இந்த மரணம் நீரில் மூழ்கியதால் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.