துறைநீலாவணை 8ம் வட்டாரத்தில் உச்சிமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்றையதினம் (13/06/2025) இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
துறைநீலாவணையில் தற்போது கண்ணகியம்மன் திருச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதில் நேற்று இரவு அம்மன் ஊர்வலம் ஆரம்பமான போது இந்த துயர சம்பவம் இடம் பெற்றதால் வீதியுலா பாதைகள் மாற்றியமைக்கப்பட்டதோடு, ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நடனங்கள், மற்றும் DJ இசை நடனங்கள் என்பவை துறைநீலாவணை 8ம் வட்டாரத்தோடு இடை நிறுத்தப்பட்டு அமைதியான முறையில் அம்மன் வீதியுலா இடம்பெற்றது.