அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த பிறகே இனி பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் பரிசீலிப்போம் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் ஆளானதாகவும் , ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் ஆளானதாகவும் கூறிய ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி Abbas Araghchi , இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் உள்ளாகும் சமயத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.