நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் , கடல்சார் மற்றும் மீனவ சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.