வவுனியாவில் படு கொலை செய்யப்பட்ட யாழ் ஆசிரியையின் உடல் ஒப்படைப்பு:

 


கணவனால் கொலை செய்யப்பட்ட    வவுனியா ஆசிரியை சுவர்ணலதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நயினாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருந்ததாக விசரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியை கர்ப்பமாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.

சம்பவம் தொடர்பில் கணவனை கைது செய்த புளியங்குளம் பொலிஸ், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.