கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று(03.06.2025) காலை 5.30 மணியளவில் கொழும்பு மட்டக்குளியில் உள்ள பஞ்ஞானந்த வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் மோதியதாலேயே
விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, பேருந்தில் அதிகளவான பயணிகள் இல்லாததால் ஓட்டுனரை தவிர எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
காயமடைந்த ஓட்டுநர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது