கொழும்பிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை சென்ற சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணியே உயிரிழந்தவராவார்.
விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து விமானிக்கு தகவலை தெரிவித்தனர்.