இளம் தம்பதி ஒன்றின் மோசமான செயல் சுற்றிவளைப்பில் கைது!

 


பதுளை - ஹல்தும்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊவாதென்ன பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி ஒன்று பொலிஸாரால் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹல்தும்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

ஹல்தும்முல்ல, வடகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய கணவரும் 20 வயதுடைய மனைவியுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தும்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.