இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தன்மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்த மனைவிக்கு எதிராக தனது மாமனார் வீட்டருகே 498A என்ற பெயரில் டீக்கடை ஒன்றை திறந்து நூதன முறையில் கணவர் ஒருவர் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைவிலங்கு அணிந்து கொண்டே தேநீரும் விற்பனை செய்வதாக தெரிய வருகிறது.
ஐபிசி 498A இவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதால் அந்தப் பெயரையே கடைக்கு வைத்து போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.