தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16,342 ரூபா தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளின் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கமைய இந்த தொகையில் மாற்றம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
குறித்த தரவுகளின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 17,625 ரூபாவாக காணப்படுகின்றது.
குறைந்த செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ள நிலையில் தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, மாதாந்தம் 16,626 ரூபாதேவைப்படுவதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.