நாட்டில் சாதாரண நடைமுறையையும் தாண்டி ஒரு கறுப்பு நடைமுறை இயங்கி வருவதாக நேற்றைய தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உரையில் வரி செலுத்தும் அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்தும் ஒரு ரூபாயேனும் அரசியல்வாதிகள் மோசடி செய்ய மாட்டார்கள் என கூறினார்.
அதேவேளை, குறித்த பணத்தை எந்த அரசியல்வாதியும் வீணடிக்க மாட்டார்கள் என நான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நடைமுறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் தாம் அறிவதாகவும் அரச பொறிமுறையில் காணப்படும் நிலைமை பற்றி கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்