கந்தளாய் மணிக்கூட்டு கோபரத்திற்கு அருகே பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (27) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் இருந்த இரண்டு மின் கம்பங்களில் மோதியதில் பேருந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பேருந்தின் சாரதி துரதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழந்துள்ளார். பேருந்தை செலுத்திய போது சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டமையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இடுகைகள்