பொலன்னறுவை பஸ் டிப்போவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களுக்கும் , தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போ நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் பயணிகளை ஏற்றிச் சென்றதைத் தொடர்ந்து, தனியார் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையிளால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போ.ச. பஸ் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களையும், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களையும் வழித்தடத்தில் ஏற்றிச் சென்றுள்ளது. இதனால், தனியார் பஸ்களுக்கான பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மாத்தறையிலிருந்து சென்ற இ.போ.ச. பஸ்ஸில் டிப்போ முகாமையாளரும் பயணித்துள்ளார். இந்நிலையில், பொலன்னறுவை டிப்போவிற்கு முன்னால் இ.போ.ச பஸ்ஸை நிறுத்திய தனியார் பஸ் சாரதி டிப்போ முகாமையாளரைத் தாக்கியுள்ளார்.