ஈரான் சமாதானத்துக்கு உடன்படாவிட்டால், அதன் மீதானஎதிர்காலத் தாக்குதல்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.
இந்நிலையில், ஈரான் சமாதானத்திற்கு இணங்கவில்லை என்றால் கடந்த சில நாட்களில் பார்த்ததை விட மிக மோசமான அழிவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்