யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் - அர்ச்சுனா தெரிவித்தார்.
இந் நிலையில் அதன் பொறுப்பு வைத்தியராக இருக்கின்ற பெண் மருத்துவர் மீது பாராளுமன்றம் ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அர்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் சுகாதாரம் தொடர்பான
விடய தானங்களின் போது தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை பல்வேறு துறைகளுடன் இயங்கி வரும் நிலையில் அதன் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினர்களும் உதவிகள் செய்து வருகின்றனர்
தெல்லிப்பழை வைத்தியசாலை பணிப்பாளருக்கு தெரியாமல் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பாராளுமன்ற ஊடக விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் - அர்ச்சுனா மேலும் தெரிவித்தார்.