யாழ். பொன்னாலை காட்டுப்பகுதியூடாக சட்டவிரோதமாக கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பின் போதே குறித்த கஞ்சா கடத்தலானது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் பொன்னாலை இளைஞர்கள் இதேபோன்ற கஞ்சா கடத்தல் ஒன்றை முறியடித்து பெருந்தொகை கஞ்சாவை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.