சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி அதே கல்லூரியில் பயிலக்கூடிய மாணவரை காதலித்து வந்துள்ளார்.
கார் வாங்க வேண்டும் என காதலன் விருப்பம் தெரிவித்ததும், குறித்த மாணவி தனது வீட்டில் இருந்து ரூ.20 லட்சத்தைத் திருடி தாராளமாக வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் பணத்தை வாங்கிய காதலன் ஏமாற்றிச் சென்றுள்ளார்.
அதனையடுத்து தந்தையுடன் சேர்ந்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.