ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதவலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2029 ஆம் ஆண்டு வரை புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றமின்றி நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது குறித்து பரிசீலிக்க 2028 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்க திட்டமிடப்படும் என்றும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், பரீட்சையின் அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டத்தை பரீட்சைத் திணைக்களம் தற்போது தயாரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை முறையாக நீக்கவும், புலமைப்பரிசில் காரணமாக மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.