தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்ற குற்றச்சாட்டில் இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான 48 வயதுடைய தாயும் 21 வயதுடைய மகளும் மேலதிக விசாரணைகளுக்காக சென்னையின் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்திய குடிவரவு அதிகாரிகள், சந்தேக நபர்களான தாயையும் மகளையும் விசாரித்து அவர்களின் கடவுச்சீட்டுகளை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது போலி கடவுச்சீட்டில் வந்த தாயும் மகளும் சென்னையில் சில வருடங்களாக சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.