இதையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணைகளை நடத்தி குறித்த நால்வரையும் கைதுசெய்துள்ளர்கள். குறித்த பகுதி போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்த பகுதியாக காணப்படுவதால் விடுதலைப்புலிகள் காலத்தில் குறித்த பகுதியில் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக நம்பி தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், யாழ்ப்பாணம் மீசாலை,கிளிநொச்சி உருத்திரபுரம், பெரியபரந்தன் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த நால்வரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.