இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக இன்றைய தினம் (15) இலங்கை வந்துள்ளனர்.
"பேட்ரியட்" எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று (15) இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் Pan-India திரைப்படமாக வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.
இந்த மிக முக்கியமான திரைப்படத்தில் மோஹன்லால், மம்முட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ஜரின் ஷிஹாப் மற்றும் ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இருவரும் இன்று காலை 11.20 மணிக்கு, இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா வந்தடைந்தனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் திரைப்பட சுற்றுலா பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள், இந்த நிகழ்வை விளம்பர நோக்கில் சிறப்பித்துப் பாராட்டுவதற்காக விமான நிலையத்தில் வரவேற்க வந்திருந்தனர்.